search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மிருதி மந்தனா"

    மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் பேட்டிங்கில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். #Harmanpreetkaur #SmiritiMandhana
    துபாய்:

    மகளிருக்கான 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் பேட்டிங்கில் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். 6-வது இடத்தில் இருந்து அவர் 3 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார். சமீபத்துல் நடந்த 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகளில் 2-வது இடத்தை பிடித்தார். இதனால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார்.

    ஸ்மிருதி மந்தனா

    ஜெமிமா ரோட்ரிக்கஸ் 6-வது இடத்துக்கும், ஸ்மிருதி மந்தனா 10-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். #Harmanpreetkaur #SmiritiMandhana
    தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #SatyanGnanasekaran #SmritiMandhana #HimaDas #ArjunaAward
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

    இதற்கிடையே, தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.



    இந்நிலையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    மேலும், நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன், நிலாகுருதி சிக்கி ரெட்டி, சுபேதார் சதீஷ்குமார், ஸ்மிருதி  மந்தானா, போபண்ணா, ஸ்ரீ சுமித், சுபாங்கர் சர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவை டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. #Satyanarayanan #SmritiMandhana #HimaDas #ArjunaAward
    ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட 20 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    புதுடெல்லி:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

    இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். 



    இந்நிலையில், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், தடகள வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. #SmritiMandhana #HimaDas
    ×